
தற்போது அதையும் மிஞ்சும் வகையில் விமானத்தின் துணையின்றி தானாகவே வானில் பறக்கும் யுக்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்காக விசேஷ உடை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை நியூசிலாந்தை சேர்ந்த நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். பறக்கும் விசேஷ உடை 2 சிலிண்டர்களை கொண்டது. அதில் முன்னோக்கி தள்ளக்கூடிய காற்றாடிகள் உள்ளன. அவை கார்பன் இழையால் ஆன சட்டங்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சட்டையை வானில் பறப்பவர் முதுகில் மாட்டிக் கொண்டு அதில் உள்ள பட்டை வாரினால் இறுக கட்டிக் கொள்ள வேண்டும். பறக்கும் போது அதில் உள்ள 2 கைப்பிடிகளை செல்லும் திசைக்கு தக்கபடி மாற்றிக் கொள்ள முடியும்.
இதன் மூலம் மணிக்கு அதிகபட்சமாக 74 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். 30 கி.மீட்டர் தூரத்தை 30 நிமிடத்தில் சென்றடையலாம். 330 கிலோ எடையை தூக்கி செல்லலாம். இந்த பறக்கும் உடை கிளன் மார்டின் என்பவரின் முயற்சியால் உருவானது. நியூசிலாந்து கிறிஸ்ட் சர்ச் நகரை சேர்ந்த இவர் கடந்த 1980–ம் ஆண்டில் அதாவது 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். அவர் தனது குழந்தை பருவத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ‘தண்டர்பர்ட்ஸ்’, ‘லாஸ்ட் இன் ஸ்பேஷ்’ போன்ற சாகச நிகழ்ச்சிகளை பார்த்து அதன் மூலம் ஆர்வம் ஏற்பட்டு இந்த முயற்சியை மேற்கொண்டனர். அவரது கனவு தற்போது தான் நனவாகி உள்ளது.
இதை மாட்டிக் கொண்டு பறக்க நியூசிலாந்தின் விமான நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, இது அடுத்த ஆண்டு (2014) முதல் பயன்பாட்டுக்கு வருகிறது. தொடக்கத்தில், இராணுவ வீரர்கள், விமான ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினருக்கு என விசேஷமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.
பின்னர் சாதாரண வடிவில் தயாரிக்கப்படும் பறக்கும் உடை 2015–ம் ஆண்டில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !