Headlines News :
Home » » பிரமாண்ட ரிலீசுக்கு தயாராகும் 'தலைவா தமிழகத்தில் 450, மலேசியாவில் 100 ஸ்கிரீன்களில்.

பிரமாண்ட ரிலீசுக்கு தயாராகும் 'தலைவா தமிழகத்தில் 450, மலேசியாவில் 100 ஸ்கிரீன்களில்.

Written By TamilDiscovery on Monday, August 5, 2013 | 10:46 AM

இளையதளபதி விஜய்யின் தலைவா படம் தமிழகத்தில் மட்டும் 450க்கும் மேற்பட்ட திரைகளில் ரிலீஸாகவிருக்கிறது. இயக்குனர் ஏ.எல். விஜய் இளையதளபதி விஜய்யை வைத்து எடுத்துள்ள படம் தலைவா.

மும்பையில் துவங்கி ஆஸ்திரேலியாவில் ஷூட்டிங் முடிந்தது. இந்நிலையில் படம் வரும் 9ம் தேதி ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது. இந்த படம் மூலம் அமலா பால் விஜய்யுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ளார். படத்தில் காமெடி சந்தானம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு சான்றிதழ்:
தலைவா படத்திற்கு முதலில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை போட்டுக் காட்டி யு சான்றிதழ் பெறப்பட்டது.

பிரமாண்ட ரிலீஸ்:
தமிழகத்தில் மட்டும் தலைவா படம் 450க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸ் ஆகிறது. உலகம் முழுவதும் 4,000க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தலைவாவின் பிரமாண்ட ரிலீஸ் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

மலேசியாவில் 100:
தலைவா படம் மலேசியாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யப்படுகிறது. அங்கு மட்டும் மொத்தம் 100 ஸ்கிரீன்களில் தலைவா ரிலீஸ் ஆகிற

ரம்ஜான்:
ரம்ஜான் பண்டிகை அன்று இந்தி நடிகர் சல்மான் கான் தனது படங்களை ரிலீஸ் செய்து வெற்றி கண்டுள்ளார். இந்நிலையில் விஜய்யின் படம் ரம்ஜான் அன்று ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவன் வேற மாதிரி.

விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி பட டிரெய்லர் தலைவா படத்தின் இடைவேளையில் வரவிருக்கிறது.

கும்கி படம் மூலம் ஹீரோவான விக்ரம் பிரபவு சரவணன் இயக்கத்தில் இவன் வேற மாதிரி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு புதுமுகம் சுரபி ஜோடியாக நடித்துள்ளார். படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வினியோக உரிமையை யுடிவி வாங்கியுள்ளது. இந்நிலையில் இவன் வேற மாதிரி டிரெய்லரை தலைவா பட இடைவேளையில் ரிலீஸ் செய்யும் உரிமையை வாங்கியுள்ளனர்.

விஜய்யின் தலைவா வரும் 9ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவிருக்கிறது. அதன் இடைவேளையில் இவன் வேற மாதிரி டிரெய்லர் வந்தால் நல்ல விளம்பரம் தான்.



Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template