உலகின் தோற்கடிக்க முடியாத மன்னர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.
இவர் கி.மு. 323 இல் தனது 32 ஆவது வயதில் காலமானார். இக்காலப்பகுதியில் எகிப்து, பேர்ஷியா, ஆசியாவையும் கைப்பற்றியிருந்தான்.
கி.மு.323-ல் ஜூன் 10 அல்லது 11 ஆம் திகதி பாபிலோனில். இருப்பினும் இவரது மரண திகதி மற்றும் மரணத்திற்கான காரணம் தொடர்பில் பல விவாதங்கள் இன்றும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.
இந்நிலையில் பேரரசன் அலெக்ஸாண்டரின் கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளனர்.
கிறீஸ் நாட்டின் எதேன்ஸ் நகரிலிருந்து வடக்கே 370 மைல் தொலைவில் இக்கல்லறை அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் அலெக்ஸாண்டரின் கல்லறை எகிப்திலேயே உள்ளதாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் முக்கியத்துவம் மிக்க நபரொருவரது கல்லறையை கண்டுபிடித்துள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஐகடாரினி பெரிஸ்டெரி தெரிவித்துள்ளார். அப்பகுதியில் பாரிய மண் மேடுபோன்ற பகுதியொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதனைச் சூழ பளிங்கு கற்களால் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவரானது கி.மு. 4 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக் கூடுமென கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 498 மீற்றர் உயரத்தில் பிரமிட் போன்ற உருவத்தில் மேற்படி மண்மேடு காணப்படுகின்றது. இது அலெக்ஸாண்டரின் தந்தையான மெசிடோனியவின் பிலிப் II வின் கல்லறையை விட சுமார் 10 மடங்கு பெரியதெனத் தெரிவிக்கப்படுகின்றது. அலெக்ஸாண்டர் மட்டுமன்றி அவரது மனைவி ரொக்சேன், மற்றும் அவரது பதவியை அடுத்து ஏற்றவர் போன்றோரின் உடல்களும் அங்கேயே புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் கிறீஸ் நாட்டின் கலாசார அமைச்சு இக் கண்டுபிடிப்பானது முக்கியமானதொன்றெனினும், ஆராய்ச்சி முழுமையாக முடியும் முன்னர் அதனை மாவீரன் அலெக்ஸாண்டருடையது எனக் கூறுவது எந்தளவு தூரத்துக்கு பொருத்தமானதென கேள்வி எழுப்பியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !