அஜீத்தின் சினிமா வாழ்க்கைக்கு இன்று 21 வயதாகிறது. இந்த நாளில் அவரை சினிமா உலகப் பிரமுகர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்தவர் அஜீத். அடுத்தடுத்து தோல்விகளையே சந்தித்தாலும், சோர்ந்து விடாமல் படிப்படியாக உயர்ந்து முன்னணி நடிகரானார்.
1993 -ல் அமராவதியில் இயக்குநர் செல்வாவால் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்டார் அஜீத். இந்தப் படம் பெரிதாகப் போகவில்லை. தொடர்ந்து பவித்ரா போன்ற படங்களில் நடித்தார். வான்மதி என்ற படம் அவரை ஓரளவு பிரபலமாக்கியது. இவர் கதாநாயகனாக அறிமுகமான அமராவதி படம் 1993ம் ஆண்டில் வெளிவந்தது.
இதற்கு முன் 1992ம் ஆண்டில் இவர் நடித்த பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்திற்கு, சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.
ஆசை, காதல் கோட்டை போன்ற படங்கள் அஜித்துக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது.
மேலும் அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, சிட்டிசன், வில்லன், அட்டகாசம் என பல ஹிட் படங்களில் நடித்தார்.
பில்லா, மங்காத்தா படங்கள் வசூல் சாதனை படைத்தன. தற்போது விஷ்ணு வர்த்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், அதற்கடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விநாயகம் பிரதர்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இது அவரது 50வது படம். இப்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆரம்பம் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டோடு அஜீத் சினிமாவுக்கு வந்து 21 ஆண்டுகள் ஆகின்றன.
ரசிகர்களால் செல்லமாக "தல" என்றழைக்கப்படும் அஜித், மிகுந்த தன்னம்பிக்கை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இந்த நாளில் அவருக்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் திரையுலக நண்பர்களும் பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்துள்ளனர், ரசிகர்களிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !