இலங்கைக்கு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தி வந்ததன் பின்னணியில் மலேசியாவை சேர்ந்த இரண்டு கோடீஸ்வர வர்த்தகர்கள் இருப்பதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.258 கிலோ கிராம் நிறை கொண்ட ஹெரோயின் பிரவுண் சுகர் ரகத்தை சேர்ந்தது என அறியப்பட்டுள்ளது.
இவற்றின் பெறுமதி 250 கோடி ரூபாவிற்கும் அதிகம் என கணிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டிற்க்குள் எடுத்து வந்தது யார்?
கோடி கணக்கில் பெறுமதியான ஹெரோயின் கொண்டுவந்தது யார் என வெளிப்படுத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !