அப்படிப்பட்ட வாழ்க்கை துணையிடம் வெளிப்படையாக எது வேண்டுமானாலும் பேசலாம், முழுமையாக நம்பிக்கையை அவர் மீது வைக்கலாம், அவரின் துணையை ஒவ்வொரு நொடியும் கொண்டாடுவதால், ஒரு இனிமையான உறவை மலரச் செய்யலாம். நம்மில் பல பேருக்கு, ஏற்கனவே அப்படிப்பட்ட வாழ்க்கை துணை அமைந்திருப்பார்கள். அவர்களே உங்களின் நெருங்கிய நண்பர்களாகவும் இருப்பார்கள். ஆனால் வெறுமனே நெருங்கிய நண்பராக இருப்பவர், உங்களை நேசிக்க ஆரம்பித்தால், உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நேரம் வந்துவிட்டது.
சில நேரம் நெருங்கிய நண்பரை நண்பராக மட்டுமே பார்க்குமாறு மனதளவில் ஒரு தடை இருக்கும். இந்த தடையை உடைத்து, நெருங்கிய நண்பரை காதலிக்க வாழ்க்கை செம ஜாலியாக செல்லும்.
பயத்தை தவிர்த்துவிடுங்கள்:
முதலில் நட்பு கெட்டு போகும் என்ற பயத்தை விட்டொழிக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஏற்கனவே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கு இடையே வரும் பிரச்சனையை எப்படி சமாளிப்பது மற்றும் சண்டைகளை எப்படி நிறுத்துவது என்பதை நன்கு அறிவீர்கள். உண்மையிலேயே நெருங்கிய நண்பர்களாக இருந்து, உறவுமுறை அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்.உங்கள் நட்பை தொடரலாம். இது கண்டிப்பாக உங்களுக்கு வலியை தந்தாலும், சிறிது காலத்தில் இந்த காயம் ஆறும். மேலும் உண்மையான நட்புக்கு, இது ஒரு சோதனை என்றும் எண்ணிக் கொள்ளுங்கள்.
உறவை விளக்குங்கள்:
நெருங்கிய நண்பரிடம், உங்கள் தற்போதைய உறவை விளக்கி, அதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புவதையும் வெளிப்படுத்துங்கள். அவருக்கும் கூட இந்த எண்ணம் இருந்திருக்கலாம் அல்லவா?குணங்களை பட்டியலிடுங்கள்:
நெருங்கிய நண்பரிடம் உங்களுக்கு பிடித்த மற்றும் நீங்கள் மதிக்கும் அனைத்து நல்ல குணங்களையும் பட்டியலிடுங்கள். பின்பு ஒரு காதல் உறவில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் பட்டியலிடுங்கள். இப்போது இரண்டு பட்டியலிலும் ஒத்து போகிற அம்சங்களை குறித்துக் கொண்டே வாருங்கள். நீங்கள் எதிர்பார்த்தது அவரிடம் இருந்தால், கண்டிப்பாக இந்த வழிமுறை உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும்.கற்பனையை பயன்படுத்துங்கள்:
உங்கள் நெருங்கிய நண்பருடன் காதல் உறவில் ஈடுபட்டால், எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது நடந்தால் உங்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளிக்கும் என்று எடுத்துகாட்டாக விளங்கும்.காதல் ரசம் சொட்டும் சூழலை நண்பர்களாகவே உருவாக்குங்கள்:
உதாரணத்திற்கு, இருவரும் கடற்கரைக்கு செல்லுங்கள், டான்ஸ் ஆடுங்கள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் உணவு அருந்துங்கள். இவ்வகை சூழலில் இருவருக்கும் இடையே ஒரு புது வகை உணர்வு ஏற்படலாம்.கனவுகளை ஒன்றாக பகிர்ந்து கொள்ளுங்கள்:
உங்கள் இருவரின் வருங்கால கனவுகளை பற்றி அடிக்கடி பேசும் போது, உங்கள் எதிர்காலத்தை அவருடன் தான் செலவிட வேண்டும் என்ற எண்ணம் வளரத் தோன்றும்.போதிய நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்:
காதலில் விழுவது என்பது துரிதமாக நடப்பது கிடையாது. காதலில் விழும் முன், வாழ்க்கையை எந்த ஒரு தருணத்திலும் உங்கள் நண்பரிடம் ஒப்படைக்க முழு மனதுடன் தயாராக வேண்டும். தயாரான நிலையில் இருந்த பின் காதலை சொல்லுங்கள்.முக்கியமான டிப்ஸ்:
நீங்கள் இருவரும் சேர்ந்து ஈடுபடும் செயல்கள் இனிமையாக இல்லாமல் போகலாம் அல்லது காதல் உணர்வு இல்லாமலும் போகலாம். இது நட்பு வரையில் இருந்தால், எந்த பிரச்சனையும் இல்லை. இதுவே உறவை அடுத்த கட்டத்திக்கு எடுத்துச் செல்ல விரும்பினால், செய்ததையே திரும்ப திரும்ப செய்யாதீர்கள், போன இடத்திற்கே மீண்டும் அழைத்துச் செல்லாதீர்கள்.மாற்றங்கள் தேவை, புதிதாக ஏதாவது செய்யுங்கள். முக்கியமாக அது காதல் உணர்வை தூண்ட வேண்டும்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !