ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் பெண்கள் உள்ளாடைகளை அணிந்தபடி உள்ள ஓவியம் ஒன்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு கான்ஸ்டன்டின் ஆல்டுனின் என்பவரது படைப்பில் உருவான டிராவஸ்டி என்ற பெயரிடப்பட்ட ஓவியம் ஒன்று காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.
இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின், பெண்கள் அணிவது போன்ற ஆடையை அணிந்து இருந்தார். அதனுடன், பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ் பெண்கள் அணியும் உள்ளாடைகளை அணிந்தபடியும், அவருக்கு தலைமுடியை சரி செய்யும் பணியில் புதின் ஈடுபடுவது போன்றும் வரையப்பட்டு இருந்தது.
இதனையடுத்து இந்த ஓவியங்கள் மியூசியத்திலிருந்து அகற்றப்பட்டது.
அத்துடன் ரஷ்ய நாட்டு சர்ச் ஒன்றின் தலைவரது வரைபடம் ஆனது அவரது உடல் முழுவதும் பச்சை குத்தப்பட்ட நிலையிலும், ஓரினச் சேர்க்கையாளர்களின் கொள்கை பிரசாரத்திற்கு தடை செய்யும் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்த அந்நாட்டு சட்ட நிபுணர்களை கேலி செய்வது போன்றும் காணப்பட்ட ஓவியம் ஒன்றும் அங்கிருந்து அகற்றப்பட்டது என மியூசியத்தின் ஊழியர் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்காததை அடுத்து மியூசியத்தை பொலிசார் சீல் வைத்து மூடியுள்ளனர் எனவும் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !