தூத்துக்குடி சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான இன்டேவ் லாஜிஸ்டிக்ஸ் என்ற ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் தூத்துக்குடி கெரக்கோ தெருவில் உள்ளது. இந்த நிறுவனத்தில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
இந்நிறுவனத்திற்கு சொந்தமான கன்டெய்னட்டல் கன்டெய்னர் பிரிக்ட் ஸ்டேஷன் மற்றும் சரக்குபெட்டக தளங்களிலும் ஒரேநேரத்தில் 25க்கும் மேற்ப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான சேவியர்பிரிட்டோ நடிகர் விஜய்க்கு நெருங்கிய உறவினர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சமீபத்தில் வெளியான 'சட்டம் ஒரு இருட்டறை', வரவிருக்கும் 'சும்மா நச்சுன்னு இருக்கு' ஆகிய படங்களின் தயாரிப்பாளர் இந்த சேவியர் பிரிட்டோ. இயக்குநர் சிநேகா பிரிட்டோ இவரது மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் தாய்மாமா:
தூத்துக்குடியில் சேவியர் பிரிட்டோ என்பவருக்கு சொந்தமானது இண்டிவா லாஜ் ஸ்பிக் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் தூத்துக்குடி பனிமய மாதா ஆலையத்தின் பின்புறம் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.அதோடு தூத்துக்குடி பைபாஸ் சாலையில் ஹெவி லாஜி ஸ்பிக் பிரைவேட் லிமிட்டெட் என்ற பெயரில் மற்றொரு நிறுவனம் உண்டு. இவைகளில் துறைமுகத்தின் ஏற்றுமதி இறக்குமதிக்கான கண்டெய்னர் பரிமாற்றம் மற்றும் பொருட்கள் இறக்குதல், ஏற்றுதல் போன்ற தொழிலையும் இந்த நிறுவனம் நடத்தி வருகிறது.
சேவியர் பிரிட்டோ திரைப்பட நடிகர் விஜய்யின் மாமனார் என்று சொல்லப்படுகிறது. அதோடு தலைவா படத்திற்கு நிதியுதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை மதுரை வருமான வரித்துறையில் இருந்து வந்த 25 அதிகாரிகளைக்கொண்ட குழு, இவரது இரண்டு நிறுவனங்கள் மற்றும் ஒரு குடோன்,அவரது அலுவலகம் உள்ளிட்ட நான்கு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !