மேற்படி இரு உணவு வகைகளினதும் பிரியர்களுக்கு பீஸாவை தெரிவு செய்வதா? அல்லது பேர்கரை தெரிவுசெய்வதா என அடிக்கடி குழப்பம் ஏற்படுவது வழமை.
இந்நிலையில் இக்குழப்பத்திற்கு தீர்வு காணும் பொருட்டு பீஸா மற்றும் பேர்கர் உனவுகளின் கலவையாக புதிய உணவொன்று ஜப்பானில் விற்பனைக்கு வந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த பீஸா லில்டில் பார்டி என்ற பீஸா உணவகமே இதனை விற்பனை செய்கின்றது.
இது 'மெகாபேர்கர்பீஸா' என அழைக்கப்படுவதுடன் இதன் நிறை 1.2 கிலோ கிராம்களாகும்.
சுமார் 400 கிராம் மாட்டிறைச்சி, வெங்காயம், விசேட சீஸ், மீட் சோஸ், போன்ற பலவற்றை உள்ளடக்கி இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2,580 யென்களாகும். எனினும் இம் மெகாபேர்கர்பீஸாவானது செம்டெம்பர் 1 முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை மட்டுமே விற்பனை செய்யப்படுமென இதனை விற்பனை செய்யும் பீஸா உணவகம் அறிவித்துள்ளது.
இதேபோல் 2010 ஆம் ஆண்டு பேர்கர் கிங் நிறுவனமும் இதேபோன்ற உணவினை அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !