சீனாவில் 26 அடுக்குமாடி குடியிருப்பில் அமைக்கப்பட்ட செயற்கை மலையை அகற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் கடந்த 2007ம் ஆண்டு 26 அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தின் மேல் மாடியில் 1000 சதுர அடியில் சீன மருத்துவரும், சட்டசபை முன்னாள் ஆலோசகருமான ஜாங் பிகுங் செயற்கை மலையை உருவாக்கினார். இதனை சுற்றிலும் மரங்கள், நீருற்றுகளும் அமைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கட்டிடத்தின் கீழ் பகுதியில் வசிப்பவர்களுக்கு, இந்த தண்ணீர் ஊற்றால் நிறைய பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில், செயற்கை மலையை இரண்டு வாரத்துக்குள் அகற்றும் படி ஜாங்குக்கு நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்றதொரு கட்டிடத்தை கட்ட ஜாங், உரிய அனுமதி பெறவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன் மலையை அமைக்கும் போது, ஜாங் அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தவர் என்பதால் யாரும் இதனை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !