டுவிட்டரில் “ஓரினச் சேர்க்கையாளர்கள் சாக வேண்டும்” என வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் ஒரினச்சேர்க்கையாளர்கள் திருமணமானது அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இவர்கள் குழந்தைகளை தத்தெடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் பெண்மணி ஒருவர், பணம் கொடுத்தால் ஒரினச்சேர்க்கையாளர்களின் தத்துக் குழந்தைகளுக்கு பாலூட்ட தயார் என்று தகவல் வெளியிட்டார்.
இந்நிலையில் ஒரினச்சேர்கையாளர்கள் சாக வேண்டும் என்றும், அவர்கள் மறைய வேண்டும் எனவும் டுவிட்டரில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இந்த கருத்துக்கு IDAHO (The International Day Against Homophobia and Transphobia) என்ற அமைப்பானது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மேலும் ஒரினச்சேர்க்கையாளர்கள் திருமணத்தை பிரான்ஸ் அரசாங்கம் அனுமதித்திருந்தாலும் இதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !