அமெரிக்காவில் மூன்று மாதங்களாக 2 குழந்தைகளுடன் கடலிலேயே தத்தளித்து கொண்டிருந்த தம்பதியினர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஷான் காஸ்டன்க்வேய்-ஹான்னா. இவர்களுக்கு அர்தித் என்ற 3 வயது மகளும், ரஹப் என்ற குழந்தையும் உள்ளது. மத நம்பிக்கை மிகுந்த இந்த தம்பதியருக்கு ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி, கருக்கலைப்பை ஏற்றுக் கொள்வது போன்றவை பிடிக்கவில்லை.
எனவே இவர்கள் அமெரிக்காவிலிருந்து 3,300 மைல் தொலைவில் உள்ள சிறிய தீவு நாடான கிரிபாட்டிக்கு செல்ல முடிவு செய்தனர்.
இதன்படி, கடந்த மே மாதம் சான் டீகோவில் இருந்து சிறிய படகில் கிரிபாட்டிக்கு கிளம்பினர். அவர்கள் கிளம்பிய நேரத்தில் புயல் வேகமாக அடித்ததால், படகை மேலும் செலுத்த முடியாமல் கடலிலேயே தத்தளித்தனர். இந்நிலையில் 3 மாதங்கள் கழித்து அந்த வழியாக சென்ற கப்பல் ஒன்று அவர்களை காப்பாற்றி அருகில் உள்ள சிலி நாட்டில் கடந்த 9ம் திகதி இறக்கிவிட்டது.
அவர்ககள் நாடு திரும்ப தற்போது அமெரிக்க அரசு விமான டிக்கெட் எடுத்து அனுப்பியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !