விஷால் நடித்த படத்துக்கு சூட்டப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். என்ற பெயர் திடீர் என்று மாற்றப்பட்டது. ‘‘எம்.ஜி.ஆர். என்பவர் மாபெரும் சக்தி. அவருடைய பெயரை தவறாக பயன்படுத்த விரும்பவில்லை’’ என்று விஷால் கூறினார்.
ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்த படம், ‘மதகஜராஜா.’ இதில் விஷால் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக வரலட்சுமி, அஞ்சலி ஆகிய இருவரும் நடித்துள்ளனர். சுந்தர் சி. டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது.
விழாவில், படத்தின் கதாநாயகன் விஷால் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
‘நான், 2003-ம் ஆண்டில், ‘செல்லமே’ படத்தின் மூலம் கதாநாயகன் ஆனேன். செப்டம்பர் 6-ந் திகதி வந்தால், சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிறது. அந்த நாளில்தான் ‘மதகஜராஜா’வை வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்.
நான் நடித்த எல்லா படங்களுமே குறிப்பிட்ட திகதியில் திரைக்கு வந்துள்ளன. இந்த படம் தாமதமாகி விட்டது. அதனால் விஷால் பிலிம் சர்க்யூட் என்ற பெயரில் சொந்த பட நிறுவனம் தொடங்கி நானே வெளியிடுகிறேன். இந்த படத்துக்கு முதலில், ‘மதகஜராஜா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது. பின்னர், ‘எம்.ஜி.ஆர்.’ என்று மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆர், ஒரு மாபெரும் சக்தி. அதை தவறாக பயன்படுத்த விரும்பவில்லை. அதனால் படத்தின் பெயர் மீண்டும் ‘மதகஜராஜா’ என்றே மாற்றப்பட்டு இருக்கிறது.’’
இவ்வாறு விஷால் கூறினார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !