இந்தியாவின் தெற்கு மும்பை கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காணாமல் போன 18 வீரர்களைத் தேடும் பணி நடை பெற்று வருகிறது. தெற்கு மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ராக்சாக் நீர் மூழ்கி கப்பல்.
நேற்று நள்ளிரவு திடீரென இக்கப்பலில் தீவிபத்து ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த மற்றொரு கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் அதன் சேதாரம் தவிர்க்கப்பட்டது. விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் 16 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்துவருகின்றன. தீ விபத்தில் நீர் மூழ்கி கப்பல் பலத்த சேதமடைந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
விபத்தில் இருந்து தப்பிக்க பல வீரர்கள் நீரில் குதித்ததாகவும், பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவ்விபத்தில் 3 அதிகாரிகள் உள்பட 18 வீரர்கள் காணவில்லை எனத் தெரிகிறது. தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரிய வரவில்லை.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !