
இன்று நீதிமன்றத்திற்கு வந்த தாமினி, தந்தையுடன் செல்வதாக கூறினார்.
இதுகுறித்து சேரன் கூறுகையில், என் பொக்கிஷம் திரும்பக் கிடைத்துவிட்டது. எனக்கு பக்கத் துணையாக நின்றது மீடியாவும் நண்பர்களும்தான். இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவிக்கிறேன் என்று கூறி தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
சேரனின் இந்த செய்கை வந்திருந்த அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது. இதற்கு முன்னதாக பேஸ்புக்கில் சேரன், இன்று என் பொக்கிஷம் திரும்பி வரும் நாள்.... அவள் இந்த உலகிற்கு வந்த நாளில் எவ்வளவு பயமும் பதட்டமும் இருந்ததோ அதைவிட 100 மடங்கு இன்று.... இன்று நான் காணப்போகும் வெற்றி எனக்கானது மட்டும் அல்ல... இவ்வுலகில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்குமானது...." என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !