ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகம் இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
இதனை நிர்மாணிக்க 3 வருடங்கள் தேவைப்பட்டுள்ளதுடன், மொத்த நிர்மாண செலவு 189 மில்லியன் பவுண்ஸ்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நூலகத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வருடம் ஏப்பிரல் மாதமே இது நிறைவடைந்துள்ளது.
கட்டிடவியலாளரான பிரன்சைன் ஹவுபனினாலேயே இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மிகவும் நவீனமான முறையில் இதன் உள்ளக வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அரிய புத்தகங்கள், புகைப்படங்கள் என பல மேற்படி நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !