அடையாளம் தெரியாத சடலத்தை கல்லைக் கட்டி கங்கையில் போலீஸ் ஒருவர் வீசுவது போன்ற போட்டோ ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மிர்சாப்பூர் மாவட்டத்தில் கட்ரா போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வரும் போலீஸ் ஒருவர், நீண்ட காலமாக அடையாளம் காணப்படாமல் கிடப்பில் கிடக்கும் சடலங்களை கங்கை ஆற்றில் வீசியது தெரிய வந்துள்ளது.
முறைப்படி இறுதிச்சடங்கு செய்யாமல், அச்சடலங்களை வெறும் வெள்ளைத் துணியில் சுற்றி ஆற்றில் வீசி வந்துள்ளார். இதற்கு முன்னரும் இதே போன்று அவர் பல சடலங்களை ஆற்றில் வீசியது தெரிய வந்துள்ளது. அந்த போலீஸ்காரருக்கு உடந்தையாக அப்பகுதியில் வசிக்கும் சூரஜ் என்பவர் இருந்துள்ளார்.
மாதாமாதம் ரூ2700 இது போன்ற சடலங்களை ஈமச்சடங்கு செய்வதற்காக அரசு வழங்கி வருகிறது. ஆனாலும், அதை தனது சொந்த செலவுக்கு பயன் படுத்திக் கொண்ட அந்த போலீஸ்காரர், சூரஜின் உதவியோடு சடலங்களை ஆற்றில் வீசியது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கருத்து அங்குள்ள போலீஸ் அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !