சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அஷாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
இப்போராட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட பலியானவர்களின் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்துள்ளது.
மேலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும் கலவரம் ஓயாமல், தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதற்கிடையே இராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அணுகுண்டுகளை பிரயோகிப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்த வீடியோ யூடியூப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !