மதுரையிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்ல, வழித்தடம் குறித்த அறிக்கை தருமாறு, உளவுத் துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் கொண்டு செல்ல, மத்திய அரசும், இலங்கை அரசும் 2010 ஜூன் 9 ல், ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில், மதுரையிலிருந்து இலங்கை அனுராதபுரத்திற்கு மின்சாரம் தர, மத்திய அரசு ஒப்பு கொண்டது. இதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு அனுப்பிய அறிக்கையில்,
"மதுரையிலிருந்து, ராமநாதபுரம் பனைக்குளம் வரை வான்வழி பாதையிலும், பனைக்குளம் முதல் இலங்கை திருக்கட்டீஸ்வரம் வரை கடல் வழியில் 280 கி.மீ., தூரத்தில், மின்சாரம் கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்போது, குறைந்த தூரத்தில் இலங்கை அனுராதபுரத்திற்கு மின்சாரம் கொண்டு செல்ல, வழித்தடம் இருந்தால் ஆலோசனை கூறுங்கள்´ என, கேட்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழக உளவுத் துறை அனுப்பிய அறிக்கையில்,
"மதுரை- பனைக்குளம்- தனுஷ்கோடி வான்வழி பாதை, தனுஷ்கோடி- அனுராதபுரம் வரை கடல் வழி பாதையில், மின்சாரம் கொண்டு செல்லலாம்.
இந்த புதிய வழித் தடத்தின் மூலம், மின்சாரம் கொண்டு சென்றால், பழைய வழித்தடத்தை விட, 30 கி. மீ., குறைய வாய்ப்பு உள்ளது´ என, குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !