பலாலி வீதி ஓரமாக வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. வடிகால் அமைப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களால் தோண்டப்பட்ட குழியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் இரண்டு கொள்கலன்கள் காணப்பட்டன. அது தொடர்பாக அவர்கள் இராணுவத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரின் குண்டு செயலிழக்கும் பிரிவினரால் அவை மீட்கப்பட்டன.
அதன் பின்னர் மோப்பநாய் சகிதம் சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிசாரினால் மீட்கப்பட்ட கொள்கலன்கள் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !