தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையே கடந்த 20ம் திகதி இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 180 ஒட்டங்களால் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது. இந்தநிலையில் இரு அணிகளும் மோதும் 2வது போட்டி நேற்று ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி இலங்கை அணி 49.2 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது. இதன்போது, சமிந்த எரங்க 7 ஓட்டங்களுடனும் மலிங்க ஓட்டம் எதனையும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர். பின்னர் டக்வத் லூயிஸ் முறைப்படி தென்னாபிரிக்க அணிக்கு 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணியால் 21 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. இதன்படி 17 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் சிறப்பாட்டக்காரராக தினேஸ் சநதிமால் தெரிவானார்.
இதன்படி 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை 2 -0 என முன்னிலையில் உள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !