இந்தியாவின் அரச பாடசாலைகளில் மதிய உணவுக்குப் பின் வழங்கப்பட்ட இரும்புச்சத்து மாத்திரையை சாப்பிட்ட 331 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டம் அரச சீனியர் செகண்டரி பாடசாலையில் மதிய உணவுக்குப் பிறகு மாணவிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை அளிக்கப்பட்டது.
அதை சாப்பிட்டதை தொடர்ந்து, 150 மாணவிகள், வயிற்று வலியாலும், மயக்க உணர்வாலும் அவதிப்பட்டனர். அவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. அவர்கள் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதுபோல், ஜிந்த் மாவட்டத்தில் மற்றொரு அரச பாடசாலை ஒன்றில் 100 மாணவர்களும், ஹிசார் மாவட்டம் சிசார் அரச நடுநிலைப் பாடசாலையில் 35 மாணவர்களும், பிரான்சி அரசு உயர்நிலைப் பாடசாலையில் 46 மாணவர்களும் இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !