மாத்தறை, கொடகமவிலிருந்து ஹம்பாந்தோட்டை, மத்தல வரை நிர்மாணிக்கப்படவுள்ள அதிவேக நெடுஞ்சாலைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
80 கிலோமீற்றர் நீளமான இந்த நெடுஞ்சாலையின் பணிகள் எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும், இந்த நெடுஞ்சாலையினூடாக கொழும்பிலிருந்து மத்தலவுக்குச் செல்ல சுமார் இரண்டரை மணிநேரம் எடுக்கும் என்றும் நெடுஞ்சாலை நிர்மாண வேலைத்திட்டத்துக்குப் பொறுப்பான பொறியியலாளர் எல்.ஜீ.லலித் பிரியந்த சில்வா தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக கொடகமவிலிருந்து பெலியத்த வரையிலும், இரண்டாவதாக பெலியத்தவிலிருந்து வெட்டிய வரையிலும் மூன்றாவதாக வெட்டியவிலிருந்து அந்தரவௌ வரையிலும் நான்காவது கட்டமாக அந்தரவிலிருந்து மத்தல வரையிலும் இந்த நெடுஞ்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.
கொடகம, பெலியத்த, கசாகல, அங்குணகொடபெலஸ்ஸ, வேட்டிய, சூரியவெவ, அந்தரவௌ மற்றும் மத்தல ஆகிய பிரதேசங்களினூடாக நெடுஞ்சாலைக்குள் பிரவேசிப்பதற்கான 8 நுழைவாயில்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !