உறவு
முறை பெண்ணொருவரை கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படும் திருகோணமலை கந்தளாய்
பிரதேச சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரும்
அவரது சகோதரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கந்தளாய் பொலிஸார்
தெரிவித்தனர்.
இந்த சம்பவம் மேலும் தெரியவருவதாவது:
கைது
செய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின், மருமகள், ஒருவருடன் காதல் தொடர்பை
கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த பெண்ணை கட்டி வைத்து
கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரான
சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் தாக்குதலுக்கு உள்ளான 34
வயதான அவரது மருமகள் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரதேச சபை
உறுப்பினரும், அவரது சகோதரும், மருமகள் தம்மை தாக்கியதாக கூறி, அதே
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !