தனுஷ் நடித்த மரியான் படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதுடன், சினிமா உலக ஜாம்பவான்களும் இப்படத்தை பாராட்டி இருக்கின்றனர்.
தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் கூறுகையில், மரியான் படத்தைப் பொறுத்தவரை ஏ ஆர் ரஹ்மான் தான் ஹீரோ என்று தெரிவித்துள்ளார். மரியான் வெற்றி மற்றும் தனக்கு கிடைத்த பாராட்டுகள் குறித்து ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில், மரியான் பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்திருப்பதுடன், படமும் வெற்றி பெற்றுள்ளது.
நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். எல்லாப் புகழும் இறைவனுக்கே...! என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தனுசின் நடிப்பு படத்திற்கு படம் மேம்பட்டு வருவதை மரியான் படம் நிரூபித்துள்ளது என்பது ரசிகர்களின் கருத்தாகும்.
மரியான் வெற்றி குறித்து ஏ.ஆர்.ரகுமான்: எல்லாப் புகழும் இறைவனுக்கே.
Written By TamilDiscovery on Sunday, July 21, 2013 | 11:37 PM
Related articles
Labels:
Cinema
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !