விபச்சார விடுதி சுவர்களில் சத்தம் இல்லாத கண்ணீர்த் துளிகள் என்கிற தலைப்பில் வந்து உள்ள பதிவு இது.
பங்காளதேஷ் நாட்டு பாலியல் தொழிலாளி யுவதிகளின் அவல வாழ்க்கையை சித்திரிக்கின்றது.
ஹாசி … இவளுக்கு இனி துன்பம் எதுவுமே இல்லை. ஏனென்றால் எப்போதுமே இவள் துன்பப்பட்ட வாழ்க்கையோடுதான் உள்ளாள். இவளை இப்போது பெற்றோரால் அடையாளம் காண முடியாது. ரொம்பவே மாறி விட்டாள். இவளது சிறுவயது தோற்றத்துக்கும் தற்போதைய தோற்றத்துக்கும் நிறையவே வித்தியாசம். முன்னர் இருந்ததை விட ஆரோக்கிய தோற்றம். ஒரு நாளில் ஏராளம் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் சேவையை கொடுக்கக் கூடிய அளவுக்கு உடல் ஆரோக்கியமாக உள்ளது.
ஹாசி என்றால் சந்தோஷம் என்று அர்த்தம். தங்கெய்லில் கண்டபரா விபச்சார விடுதியை சேர்ந்த 17 வயது யுவதி. பங்காளதேஷின் வட மேற்கு பகுதியில் அமைந்து உள்ளது தங்கெய்ல் நகரம்.
இந்நகரத்தில் உள்ள மிக ஒடுங்கிய வீதிகளில் மாலை நேரங்களில் யுவதிகள் முகத்துக்கு அலங்காரப் பூச்சுகள் பூசிக் கொண்டு, எடுப்பான உடைகள் அணிந்து கொண்டு நிற்பார்கள்.
இவர்கள் வயது வேறுபாடுகள் உடையவர்கள். அநேகர் பருவ வயதுக்காரர்கள். ஆண்களின் கவனத்தை ஈர்க்கின்றமைக்காக சிரித்துக் கொண்டும், சொண்டுகளுக்குள் சிரித்துக் கொண்டும், கைகளை பிசைந்து கொண்டும் நிற்பார்கள்.
இங்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 விபச்சார விடுதிகள் உள்ளன. ஆனால் இவை 900 பாலியல் தொழிலாளிப் பெண்களுக்கு இவை சிறைச்சாலைகளாக இருக்கின்றன. இவ்விபச்சார விடுதிகளை சேர்ந்த இளம் யுவதிகள் ஒவ்வொரு நாளும் தலா 10 தொடக்கம் 15 வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய வேண்டும். இவர்கள் அடிமைப் பெண்கள் மாதிரி. இப்பெண்களை விலைக்கு வாங்கிய எஜமானர்கள், விடுதி உரிமையாளர்கள் ஆகியோருக்கு இப்பெண்கள் கட்டுப்பட்டு நடந்தே ஆக வேண்டும்.
ஹாசி 10 வயது முதல் செக்ஸ் தொழிலில் உள்ளாள். முதன் முதல் வந்த வாடிக்கையாளரால் கற்பழிக்கப்பட்டாள். கற்பழிக்கப்படுகின்றாள் என்பதை அறிந்து இருக்கவில்லை. பயங்கர வேதனை. அழுதாள். செக்ஸ் என்றால் என்ன? என்பதை அப்போது அறிந்திருக்கவே இல்லை.
ஒவ்வொரு நாளும் ஒருவர் பின் ஒருவராக வாடிக்கையாளர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இவர்களுடன் செக்ஸ் வைக்க வேண்டும். ஹாசி கணக்கு வைத்துக் கொண்டதில்லை. 20 முதல் 25 வாடிக்கையாளர்கள் வரை இருக்கலாம். இவர் காலையில் எழுகின்றபோது 05, 06 வாடிக்கையாளர்கள் இவரது அறைக்கு முன்பாக கியூவில் நிற்பார்கள்.
ஹாசி வயதைக் காட்டிலும் அதிக தோற்றம் உடையவள். இங்கு ஒரெடெக்ஸின் என்கிற ஊக்க மருந்து சாதாரணமாகவே கிடைக்கும். இது பயங்கர பக்க விளைவுகள் கொண்டது. இதை சாப்பிடுகின்றபோது எடுப்பாக காட்சி கொடுப்பார்கள்… பலிக்காக வளர்க்கப்படுகின்ற மாடுகள் மாதிரி.
ஹாசிக்கு 04 வயதில் ஒரு ஆண் குழந்தை. உறவினர்களுடன் வளர்கின்றான். இவள் நீண்ட காலமாக மகனை பார்க்கவில்லை. மகன்தான் இவளுக்கு எல்லாம்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !