கூடங்குளம் அணுமின் நிலையத்தில் நள்ளிரவில் செறியூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் மின்உற்பத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒவ்வொன்றும் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன்கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தியை துவக்கும் வேளையில் பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டன. கடந்த 2012 செப்டம்பரில் முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
எரிபொருள் நிரம்பல் நிறைவடையும் நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மின் உற்பத்தி தள்ளிவைக்கப்பட்டது. இதனிடையே முதலாவது அணுஉலையில் மின்உற்பத்தியை துவக்குவதற்கு நேற்று அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விஞ்ஞானிகள் அனுமதியளித்தனர்.
இதையடுத்து வியாழன் இரவு 11.50 மணிக்கு மின்உற்பத்தி துவங்கியது. செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை எரிபொருளாக கொண்டு மின்உற்பத்தி துவங்கியது.
அணுபிளவின் வெப்பத்தால், ஏற்படுத்தப்படும் நீராவியின் மூலம் டர்பன்களை சுழலச்செய்து மின்உற்பத்தி கிடைக்கிறது. மின்உற்பத்தியின் துவக்கம்தான் இதுவெனவும், முழுமையான மின்உற்பத்தி கிடைக்க இன்னமும் சில நாட்கள் ஆகலாம் எனவும் தெரிகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !