கென்யா நாட்டு பெண்ணை கடத்தியதாக, சவுதி அரேபிய இளவரசி, அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சவுதி அரேபிய இளவரசர், அப்துல் ரகுமானின் மனைவியரில் ஒருவர், மஷேல் அலேபான்,42. இவருக்கு அமெரிக்காவில் நிறைய சொத்துக்கள் உள்ளன. வீட்டு வேலை செய்வதற்காக, கென்யா நாட்டை சேர்ந்த, 30 வயது பெண்ணை, கடந்த ஆண்டு, பணிக்கு அமர்த்தினார் மஷேல். இதற்காக, கென்யா நாட்டு பெண்ணுக்கு, மாத சம்பளம், ஒரு லட்சம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.
கடந்த மே மாதம், இளவரசி குடும்பத்தினர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, வீட்டுக்கு வந்தனர். இவர்களுக்கு வேலை செய்வதற்காக, கென்ய பெண் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த, நான்கு பெண்கள், அழைத்து வரப்பட்டனர். இளவரசி குடும்பத்தில் உள்ள எட்டு பேருக்கும் வேலை செய்யும்படி, கென்ய பெண் அறிவுறுத்தப்பட்டார். அவர்கள், எட்டு மணி நேர வேலைக்கு பதில், 16 மணி நேரம் வேலை வாங்கியுள்ளனர்.
இவரது கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களையும், இளவரசி மஷேல் வாங்கி வைத்து கொண்டார். கென்ய பெண், வெளியே செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கிடையே, இளவரசி வீட்டிலிருந்து தப்பிய, கென்ய நாட்டு பெண், பொலிஸில் புகார் செய்தார். இந்த புகாரை ஏற்ற பொலிஸார் இளவரசியை கைது செய்தனர். இளவரசிக்கு பிணை கோரி, சவுதி தூதரகம் விண்ணப்பித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 30 கோடி ரூபாய் ரொக்க பிணையில் இளவரசியை விடுவித்துள்ளது.
இருப்பினும், இளவரசி நாட்டை விட்டு வெளியேற, தடை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !