Headlines News :
Home » » இஸ்ரோவின் வரலாற்றிலேயே முதல் முறையாக இரவில் ராக்கெட் ஏவுகின்றது.

இஸ்ரோவின் வரலாற்றிலேயே முதல் முறையாக இரவில் ராக்கெட் ஏவுகின்றது.

Written By TamilDiscovery on Monday, July 1, 2013 | 11:01 AM

ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் வரலாற்றிலேயே முதல் முறையாக இரவில் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறவுள்ளது. பிஎஸ்எல்வி சி 22 ராக்கெட் மூலம், ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ என்ற செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இஸ்ரோவின் வரலாற்றில் இரவில், அதுவும் கிட்டத்தட்ட நள்ளிரவு நேரத்தில் ராக்கெட் ஏவும் நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால் இந்திய விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

சதம் கண்ட இஸ்ரோ:
இதுவரை 100க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுதலை கடந்த 50 ஆண்டுகளில் கண்டுள்ளது இஸ்ரோ.

முதல் முறையாக நள்ளிரவில்:
இந்த நிலையில் முதல் முறையாக இன்று நள்ளிரவு வாக்கில் பிஎஸ்எல்வி சி22 ராக்கெட்டை அது ஏவுகிறது.

ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ:
வாகனப் போக்குவரத்தை கண்காணிப்பதற்காக இந்தியா உருவாக்கியுள்ள பிரத்தியேக நேவிகேஷனல் செயற்கைக் கோள்தான் ஐஆர்என்எஸ்எஸ் 1 ஏ எனப்படும் இந்திய பிராந்திய நேவிகேஷனல் செயற்கைக் கோள் ஆகும்.

மொத்தம் 7 மொத்தம்:
7 செயற்கைக் கோள்களை 2014ம் ஆண்டுக்குள் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் செயற்கைக்கோள்தான் இன்று செலுத்தப்படவுள்ளது.

சரியாக 11.40 மணிக்கு:
இன்று இரவு 11.40 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஏவுதளத்திலிருந்து இந்த செயற்கைக் கோளை சுமந்தபடி பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாயும்.

காலையில், பகலில் ஏன் மாலையில்:
கூட இதற்கு முன்பு காலையிலும், பகலிலும், மாலையிலும் கூட பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இந்தியா ஏவியுள்ளது. இருப்பினும் நள்ளிரவுவாக்கில் ஏவப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சரி ஐஆர்என்எஸ்எஸ்1 ஏ-வின் வேலை என்ன? தரை மார்க்கமான போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, கடல் வழிப் போக்குவரத்து உள்ளிட்டவற்றைக் கண்காணித்து அதை சரியான திசையில் வழிநடத்துவதற்கான தகவல்களை அனுப்பும் நோக்கில்தான் இந்த செயற்கைக் கோள் செலுத்தப்படவுள்ளது.

1500 கிலோமீட்டர்:
தொலைவுக்கு இந்திய எல்லைக்குள்ளும், வெளியிலுமாக கிட்டத்தட்ட 1500 கிலோமீட்டர் தொலைவுக்குஇந்த செயற்கைக்கோளின் எல்கை இருக்கும்.










Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Proudly powered by Blogger
Copyright © 2011. TamilDiscovery - All Rights Reserved
Template Design by Creating Website Published by Mas Template