கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை துப்பாக்கியால் சுட மறைந்திருந்த வனபரிபாலன அதிகாரியை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸில் ஒப்படைத்த சம்பவம் நிலாவெளிப் பகுதியில் நடைபெற்றுள்ளது.
குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சின்னவன் சுந்தரம் என்பவரை சுடுவதற்காக தனது நண்பர்களுடன் ஒழிந்திருந்த வன பரிபாலன அதிகாரி லலித் பண்டார என்பவரையும் அவரது சகபாடிகள் இருவரையும் ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து குச்சவெளி பொலிஸில் ஒப்படைத்தனர்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
வனபரிபாலன அதிகாரியும் அவரது நண்பர்கள் இருவரும் இறக்கக்கண்டி கிராமத்திலிருந்து துப்பாக்கியுடன் சுந்தரத்தை சுடுவதற்காக அவரின் வீட்டுக்கு அருகில் கடந்த புதன்கிழமை இரவு பதுங்கியிருந்ததைக் கண்ட ஊர் மக்கள் மேற்படி மூவரையும் துரத்திய வேளையில் வனபரிபாலன அதிகாரி அவர்களை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பி ஓடமுயன்ற வேளை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து 119க்கு தொலைபேசி மூலம் தெரிவித்து அந்த மூவரையும் குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
Home »
Sri lanka
» கொலை செய்யும் நோக்குடன் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த வனபரிபாலன அதிகாரி மக்களால் மடக்கிப் பிடிப்பு!
கொலை செய்யும் நோக்குடன் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த வனபரிபாலன அதிகாரி மக்களால் மடக்கிப் பிடிப்பு!
Written By TamilDiscovery on Thursday, July 4, 2013 | 6:18 AM
Labels:
Sri lanka
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !