யேமனில் கொல்லப்பட்ட அல் கொய்தா இயக்கத் தலைவர்களில் ஒருவரான அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் இஸ்லாம் குறித்து போதனை செய்ய சென்றபோது ஆயிரக்கணக்கான டொலர்களை விலை மாதுகளுக்காக செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பிறந்த முஸ்லிம் மத தலைவர் அன்வர் அல் அவ்லாகி. அவர் அல் கொய்தா அமைப்பின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார்.
அவர் இஸ்லாம் குறித்து போதிக்க அமெரிக்கா சென்றுள்ளார். அவர் 2001ம் ஆண்டின் இறுதியில் இருந்து 2002ம் ஆண்டு துவக்கம் முதல் எஃப்.பி.ஐ. இன் கண்காணிப்பில் இருந்தார். அப்போது அவர் ஆயிரக்கணக்கான டொலர்களை செலவு செய்து விலை மாதுகளுடன் உல்லாசகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2002ம் ஆண்டு அவர் பென்டகனில் பேசவிருந்ததற்கு சற்று நேரத்திற்கு முன்பு கூட வொஷிங்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் 400 டொலர்கள் கொடுத்து ஒரு விலை மாதுவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
வெர்ஜினியாவில் உள்ள பள்ளிவாசலொன்றில் இமாமாக இருந்த அவர் வாஷிங்டனில் விலை மாதுகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அவர் வெளிப்படையாக அல் கொய்தாவுடன் தன்னை இணைத்துக் கொண்டதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் விலைமாதுகளுடன் இருப்பது குறித்து பல்வேறு அரச முகவர் நிலையங்கள் அவரிடம் விசாரணை நடத்தின.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !