முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் ஆட்டம் போர்ட் ஆப் ஸ்பெயினில் நாளை இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகளிடையே நடைபெறவுள்ளது.
மூத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள், இரண்டாவது போட்டியில் இந்தியாவையும் தோற்கடித்து முதலாவது இடத்தில் உள்ளது. இந்திய அணி முதல் இரண்டு ஆட்டத்தில் தோற்றதால் நாளைய போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. நாளைய போட்டியில் இந்திய அணி தோற்றால் தொடரில் இருந்து வெளியேற்றப்படும். இந்தநிலையில் இந்திய அணியின் தலைவர் தோனி உபாதை காரணமாக போட்டியில் இருந்து நீங்கியமை இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் தலைவராக பொறுப்பேற்றுள்ள வீராட் கோலிக்கு நாளைய ஆட்டம் கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகின்றது. மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு போட்டிகளிலும் வென்றதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 9 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணி இறுதிப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
மேலும் காயம் அடைந்த தலைவர் பிராவோ அணிக்கு மீண்டும் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !