மேக்கிங், புரமோஷன் என்ற பெயரில் சினிமாவின் அத்தனை விஷயங்களையும் வெளியில் விடுவது சரியல்ல, கொஞ்சமாவது இரகசியம் வேணும், என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
சமீபத்தில் பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "சினிமா ரொம்ப உணர்வுபூர்வமான ஊடகம். ஒரு இரசிகன் திரையரங்கிற்கு வந்தா, அவனை நாம திரையரங்க ஆசனத்தில் உக்காரவைக்கக் கூடாது. கதை நடக்கும் களத்துக்கு... அந்த சூழ்நிலைக்கே கடத்திட்டுப் போயிடணும். அந்த அனுபவம்தான் சினிமாவின் மேஜிக். ஆனா இப்போ, 'மேக்கிங்', 'புரமோஷன்' னு படப்பிடிப்பு இரகசியங்களை வழங்கி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்துல அதையெல்லாம் இரகசியமா வெச்சிருப்பாங்க. இரசிகர்களும் திரையரங்கில் அவங்க நடிக்கிறதைப் பார்த்துப் பிரமிச்சுக் கைத்தட்டுவாங்க. அப்படி ஒரு இரகசியத் திரை கொஞ்சமாவது இப்போ தேவை. படப்பிடிப்பில் நாங்க கஷ்டப்பட்டு நடிக்கிறதை, 'மேக்கிங்'கிற பேர்ல எல்லாத்தையும் காமிச்சுட்டா, அப்புறம் அந்தக் காட்சியை திரையரங்கில பார்க்கிறப்போ எந்தத் த்ரில்லும் இருக்காது.
இந்த காட்சியா? இதை எப்படி எடுத்தாங்கன்னு நான் இணையத்திலயே பார்த்துட்டேனே'னு சாதாரணமா சொல்லிட்டுப் போயிடுவாங்க.
அது சினிமாவுக்கு நல்லதில்லைங்கண்ணா! மேஜிக்கை ஸ்க்ரீன்ல காட்டுவோம் வாங்கண்ணா! என்று குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !