Colleeen Burns என்ற 41 வயதுடைய நியுயோர்க்கைச் சேர்ந்த பெண் ஒருவர் மிகையான மருந்து உட்கொண்ட காரணத்தினால் 2009 ஒக்டோபர் மாதம் New York.St Joseph’s Hospital Health Centrey அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்பெண்ணின் மூளை செத்து அவர் கோமாநிலைக்கு ஆளாகிவிட்டார் என வைத்தியர்கள் முடிவு செய்து அவரது உடலுறுப்புகளைத் தானம் செய்வதற்காக அகற்ற முற்பட்டபோது சத்திரசிகிச்சை மேசையில் இருந்து எழுந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.
Burnscap உயிருடன் இருக்கின்றார் என்ற அறிகுறிகளை வைத்தியர்கள் உதாசீனம் செய்து உள்ளனர் என சுகாதாரதிணைக்களம் கண்டுபிடித்ததனால் $US6000 ($6600)அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உடலுறுப்புக்கள் அகற்றப்படுவதற்கு முதல் நாள் அவரது கால் விரல்கள் நாசித்துளைகள் போன்றனவற்றில் அசைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. நாக்கு போன்றவைகளும் அசைந்துள்ளன.
Post-Standardep நிருபர்கள் இது சம்பந்தமாக கேள்விகள் எழுப்பும் வரை வைத்தியசாலை இது சம்பந்தமாக எந்தவித விளக்கமும் வெளியிடவில்லையென்று கூறப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !