கனடாவில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டொரண்டோ நகரில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான சுரங்கப் பாதைகள் வெள்ள நீரால் சூழப்பட்டுவிட்டது.
பல இடங்களில் தண்டவாளங்கள் முழுவதும் தண்ணீர் தேங்கியிருப்பதால் ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மீட்புப் படையினரும், காவல்துறையும், சிறிய படகுகளின் உதவியோடு பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர். இந்நிலையில் கனமழைக்கு கால்குரே பகுதியில் 3 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கள் கிழமை ஏற்பட்ட கனத்த வெள்ளப் பெருக்கினால் இடிந்து விழுந்த கட்டிடத்தை ரொறொன் ரோ தீயணைப்பு படையினர் செவ்வாய்கிழமை பார்வையிட்டுள்ளனர்.
பொலிசார் இச்சம்பவத்தை திங்கட்கிழமை கவனித்ததாகவும், ஆனால் தீயணைப்பு படையினர் செவ்வாய்கிழமை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. மெல்லிய இயற்கை எரிவாயு மணந்ததாக கிடைத்த அறிவிப்பின் பிரகாரம் அவர்கள் அங்குசென்றதாக கூறப்படுகின்றது. இக்கட்டிடம் Avenue and Highway 401ற்கு அருகாமையில் 62 Belfield சுனல் அமைந்துள்ளது. கட்டிடத்தின் கூரையும் பின்பக்கசுவரும் இடிந்துவிழுந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு அண்மையில் செல்லவேண்டாமென பொலிசார் பொதுமக்களை கேட்டுகொண்டுள்ளனர். Greater Toronto பகுதியிலும் நகரத்தின் பல பாகங்களிலும் கன மழையினால் பயணிகள் சிம்ம சொப்பன நிலைமைக்குள்ளாகியுள்ளனர். சுரங்க வழி ரயில் போக்குவரத்து சேவை முற்றாகத் துண்டிக்க ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிசிசாகாவின் 80சதவீத பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Toronto பூராகவும் 300,000 பாவனையாளர்கள் மின்வலுவை இழந்திருப்பதாக ரொறொன்ரோ Hydro பிரிவினர் கூறியுள்ளனர். மக்களை அவரவர் வீடுகளில் இருக்கும்படியும் சுரங்கபாதைகள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்றும் ரொறொன்ரோ பொலிசார் கூறியுள்ளனர். ரோறொன்ரோ நகரம் கடுமையான இடிழுழக்கம், வெள்ளம் ஏற்படலாம் என்ற எச்சரிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. வாகனம் நகராமல் நின்றுவிட்டால் உதவி கிடைக்கும் வரை வாகனத்திற்குள் இருக்கும் படி பொலிசார் கூறியுள்ளனர். Don Valley Parkway தெற்கு Bayview Avenue விலிருந்து Gardiner Expressway மூடப்பட்டுள்ளது.
Don River கரை Yonge Street and York Mills Road ற்கு அண்மையில் Hoggs Hollow பகுதியில் உடையக்கூடிய அபாயம் இருப்பதாக ரொறொன்ரோ பிராந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !