இதற்கு முன்னர் வரை ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் பார்வையாளர்கள் சுதந்திர தேவி சிலையையும், அதன் அருகாமையில் உள்ள பூங்காவையும் கண்டு களித்து வந்தனர். இந்த சிலையின் தலைப் பகுதியில் உள்ள கிரீடத்தில் இருந்து நியூயார்க் நகர துறைமுகத்தின் எழில்மிகு காட்சியை பார்த்து ரசிக்க முடியும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்கி 31ம் தேதி வரை அமெரிக்காவை உலுக்கி எடுத்த சாண்டி புயலின் கோரத்தாண்டவத்தால் சுதந்திர தேவி சிலையை ஒட்டியுள்ள பகுதிகள் வெள்ளக் காடாக மாறின.
அந்த சிலை அருகே இருந்த நடைபாதைகள், மின் சாதனங்கள், நீரிறைக்கும் இயந்திரங்கள் போன்றவை பழுதடைந்ததால் கடந்த 8 மாதங்களாக அவற்றை சீர்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ஜூலை 4ம் தேதி அமெரிக்காவின் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தேவி சிலையின் சீரமைப்பு பணிகளும் நிறைவடைந்து விட்டதால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் சுதந்திர தேவி சிலையை வரும் வியாழக்கிழமையில் இருந்து பொதுமக்கள் பார்வையிடலாம் என நியூயார்க் அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, ஏராளமான அமெரிக்கர்கள் 'ஆன் லைன்' மூலம் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !