அமெரிக்காவின் கென்டுக்கி மாகாணம் ஹாப்கின்ஸ்வில்லி பகுதியில் வசித்து வரும் முதியவர், சம்பவத்தினத்தன்று வீட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துக் கொண்டிருந்திருக்கிறார். அவரது 5 வயது பேரனும், 2 வயது பேத்தியும் அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். துப்பாக்கியைத் துடைத்துக் கொண்டிருந்த தாத்தா, இடையில் வேறு வேலை காரணமாக உள் அறைக்குச் சென்றுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரது அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவரது பேரன் துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளான்.
எதிர்பாராத விதமாக ட்ரிக்கரில் கை பட்டு விட, அருகில் விளையாடிக் கொண்டிருந்த அவனது தங்கையின் முகத்தில் பாயந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே அவள் பரிதாபமாக பலியானாள்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !