சோதனை என்ற பெயரில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவரை அழ வைத்து வேடிக்கை பார்த்துள்ளனர் டெல்லி விமான நிலைய பாதுகாவலர்கள்.
38
வயதான சுரஞ்சனா கோஷ் ஐகாரா என்பவர் மார்க்கெட்டிங் தொழிலில்
ஈடுபட்டுள்ளார். இவர் மாற்றுத் திறனாளி என்பதால், செயற்கை கால்
பொருத்தியுள்ளார். இந்நிலையில் மும்பை வந்த அவர் அங்கிருந்து டெல்லிக்கு
விமானத்தில் பயணித்தார். டெல்லி விமான நிலையம் வந்து சேர்ந்த அவருக்கு
பெரும் சோதனை காத்திருந்தது. பாதுகாப்பு சோதனைக்காக சுரஞ்சனா தடுத்து
நிறுத்தப்பட்டார்.
அவரது உடமைகளைப் பரிசோதித்த அதிகாரிகள், அவர் பொருத்தியிருந்த செயற்கைக்
காலையும் சோதனையிட வேண்டும் என்று கூறியதால் சுரஞ்சனா பெரும் அதிர்ச்சி
அடைந்தார்.
அது செயற்கைக் கால் அதைக் கழற்றினால் மீண்டும்
பொருத்துவது கடினம் என்று சுரஞ்சனா கூறியும், அதை காதிலேயே போட்டுக்
கொள்ளாமல் கழற்றியே தீர வேண்டும் என்று கூறினராம். இதனையடுத்து உயர்
அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. மேலும் அவரது
செயற்கைக் காலை கழற்றி எடுத்தும் சோதனையிட்டனர் பாதுகாவலர்கள்.
அத்துடன்
அவரை இருக்கையிலிருந்து எழும்ப வைத்து தூக்கிக் கொண்டு போய் இடிடி
எனப்படும் வெடிபொருள் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஸ்கேனரிலும் நிறுத்தி
சோதனையிட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். இந்த விடயம் காட்டுத்தீ போல்
இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !