தமிழகத்தின் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள பவானிசாகரில் அரசு மேல்நிலைப் பாடசாலையில் ஏழாம் வகுப்பில் கற்றுவரும் இலங்கை அகதி முகாமை சேர்ந்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாடசாலையில் பணியாற்றும் ஓவிய ஆசிரியர் தியாகராஜன் என்பவரே பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக குறித்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், நேற்று மாலை திடீரென பவானிசாகர் அரசு மேல்நிலைப் பாடசாலையை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து அங்கு சென்ற பவானிசாகர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம், எஸ்.ஐ., கணேசன் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முதன்மை கல்வி அதிகாரியிடம், இதுபற்றி கூறி, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் பெற்றோர் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !