இந்நிருபர் இறப்பதற்கு முன்பாக இராணுவத்தின் துப்பாக்கி சூட்டை படம்பிடித்துள்ளார்.
எகிப்தின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த முகமது முர்ஸிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் அடிக்கடி முர்ஸியின் ஆதரவாளர்களும், போராட்டக்காரர்களும் பல இடங்களில் மோதிக் கொண்டனர். இதற்கிடையே முர்ஸி கைது செய்துள்ள இராணுவம், இடைக்கால அரசை நியமித்துள்ளது. இடைக்கால ஜனாதிபதியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பேற்றார். கைது செய்யப்பட்ட முர்ஸி, கெய்ரோவில் உள்ள இராணுவத்தின் குடியரசு பாதுகாப்பு அதிகாரிகள் கிளப்பில் காவலில் வைக்கப்பட்டார். அவரை விடுவிக்கக் கோரி, ஆதரவாளர்கள் தொடர்ந்து கிளப்பின் முன்பு கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கடந்த 8ம் திகதியும் இதேபோன்று முர்ஸியின் ஆதரவாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாலையில் சூரியன் மறையும் நேரத்தில், திடீரென இராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 51 பேர் பலியாயினர். இச்சம்பவம் நடந்த சில நிமிடங்களில், அல் ஹோரியா வா அல் அடாலா பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு நபர் கேமராவுடன் வந்தார். துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் பத்திரிகை புகைப்படக் கலைஞர் ஒருவர் அடையாள அட்டையுடன் இறந்து கிடந்ததாகவும், அதை வைத்து அவரது கமெரா மற்றும் செல்போனை கொண்டு வந்ததாகவும் கூறினார்.
உடனடியாக பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, இறந்தது அந்த பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் அகமது அஸ்செம்(26) என்று தெரியவந்தது. அவரது கமெராவில் ஆர்ப்பாட்டம் அனைத்து பதிவாகி இருந்தது. இறக்கும்போது எங்கிருந்தோ ஒரு குண்டு வந்ததுடன் கமெரா வானத்தை நோக்கி பார்க்கிறது.
குண்டடிப்பட்டு இறந்த அஸ்செமின் நெற்றியில் சரியாக குண்டு பாய்ந்திருந்தது. இதனால் குறிபார்த்து சுடும் இராணுவ வீரரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !