மலசலகூட கதவு என நினைத்து விமானத்தின் கதவை திறக்க முயற்சித்த குடிபோதையில் இருந்த கிரிக்கெட் வீரர் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் அவதானத்துடன் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
இந்த கிரிக்கெட் வீரரின் நடத்தை மற்றும் செயற்பாடுகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கும் முழு நாட்டிற்கும் நன்கு தெரியும் என கொழும்பில் இன்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி சென்ற இந்த வீரர் 230 பயணிகளை ஏற்றிய விமானத்தில் குடிபோதையில் அநாகரீகமாக ஒழுக்கமின்றி நடந்து கொண்டமை முழு நாட்டுக்கும் அபகீர்த்தி என சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு பெரிய பதவியில் இருக்கும் நபர்களின் பிள்ளைகளுக்கு ஒழுக்கக் கோவை, சட்ட ஒழுங்கு கிடையாது எனவும் ஆனால் இவ்வாறான செயற்பாடுகளை முழு நாட்டுக்கும் வெளிப்படுத்தும் ஊடகங்களுக்கு ஒழுக்கக் கோவை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை மிகவும் கேவலமான விடயம் எனவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !