வயது குறைந்த மாணவரொருவனுடன் உறவு கொண்ட ஆசிரியரொருவர் அமெரிக்காவின் தென் கலிபோர்னியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
லோரா எலிசபெத் என்ற 28 வயதான ஆசிரியை 16 வயதான மாணவரொருவருடனே உறவு வைத்துக்கொண்டுள்ளதுடன் அவனது குழந்தைக்கும் தாயாகியுள்ளார். சட்டத்துக்கு புறம்பான முறையில் வயது குறைந்த ஒருவருடன் உறவு கொண்டதாக ஆசிரியை மீது மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்தமை ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 18 ஆம் திகதியே குறித்த ஆசிரியை மாணவனின் குழந்தையை பிரசவித்துள்ளார்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !