ஸ்மார்ட் போன்கள் எனும் போது செம்சுங், அப்பிள், பிளக்பெரி, எச்.டி.சி தொடர்பான பெயர்களே அதிகமாக பேசப்படுபவையாக உள்ளன.
ஆனாலும் நொக்கியா போன்ற சில நிறுவனங்கள் ஸ்மார்ட் போன் சந்தையில் தம்மை நிலைநாட்டிக்கொள்ளும் பொருட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது நொக்கியா 41 மெகாபிக்ஸலுடன் கூடிய ஸ்மார்ட் போன் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இப் புதிய ஸ்மார்ட் போன் கெமராவின் மூலம் இதுவரை சாத்தியப்படாத அளவு துல்லியமான படங்களை எடுக்க முடியுமென நொக்கியா தெரிவிக்கின்றது. எனினும் இதேபோன்று கடந்த வருடமும் பியோர்விவ் 808 என்ற 41 மெகாபிக்ஸல் சென்சருடன் கூடிய கையடக்கத்தொலைபேசியொன்றை நொக்கியா வெளியிட்டிருந்தது. ஆனால் அது எதிர்ப்பார்த்த வரவேற்பைப் பெற்றதா என்பது சந்தேகம்.
இந்நிலையில் தற்போது 41 மெகாபிக்ஸல் கெமராவுடன் கூடிய ஸ்மார்ட் போனை நொக்கியா அறிமுகப்படுத்தியுள்ளது. விண்டோஸ் மூலம் இயங்கும் குறித்த ஸ்மார்ட் போனானது லுமியா வரிசையைச் சேர்ந்தது. இது Lumia 1020 எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் தொழிநுட்ப அம்சங்கள் சில:
General: GSM 850/900/1800/1900 MHz, UMTS 850/900/1900/2100 MHz; HSDPA 42.2 Mbps, HSUPA 5.76Mbps; LTE bands 1, 3, 7, 8, 20 LTE Cat 3 100Mbps down, 50Mbps up
Form factor: Touchscreen bar
Dimensions: 130.4 x 71.4 x 10.4; 158 g
Display: 4.5" 16M-color WXGA (768 x 1280 pixels) Clear Black AMOLED capacitive touchscreen; Pure Motion HD+, 2.5D sculpted Gorilla glass 3; Super sensitive touch
Chipset: 1.5GHz dual-core Krait processor, Adreno 225 GPU, 2GB of RAM
OS: Windows Phone 8
Memory: 32/64 GB of built-in storage;
Still camera: 41 megapixel camera with 6-lens ZEISS optics, OIS, 3x zoom, xenon and LED flashes
Video camera: 1080p video recording at 30fps with 2 Rich Recording mics; 1.2MP front-facing camera with 720p video
Connectivity: dual-band Wi-Fi a/b/g/n, stereo Bluetooth 3.0, standard microUSB port, GPS receiver with A-GPS and GLONASS, HERE Drive+ free worldwide navigation, 3.5mm audio jack, NFC
Battery: 2,000mAh
Misc: Exclusive Pro Camera app, FM Radio, built-in accelerometer, multi-touch input, proximity sensor; available in Yellow, White or Black
நொக்கியாவும், மைக்ரோசொப்டின் விண்டோஸுடன் இணைந்து தன்னால் முடியுமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு ஸ்மார்ட் போன் போரில் வெற்றிகொள்ளவே முயற்சிக்கின்றது.
அதன் ஒரு அங்கமாகவே துல்லியமான கெமராவுடன் கூடிய லுமியா 1020 வை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் ஸ்மார்ட் போன்களை பொறுத்தவரையில் அதிகமான பாவனையாளர்கள் அதில் கெமராவிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மிகக் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே லுமியா 1020 சந்தையில் எவ்வளவு தூரத்துக்கு வரவேற்பைப் பெறப்போகின்றது என்பதனை சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.
Home »
Technology
» ஸ்மார்ட் போன் வரிசையில் முன்னிலை வகிக்க போராடும் நொக்கியாவின் புதிய அஸ்திரம்!
ஸ்மார்ட் போன் வரிசையில் முன்னிலை வகிக்க போராடும் நொக்கியாவின் புதிய அஸ்திரம்!
Written By TamilDiscovery on Friday, July 12, 2013 | 4:19 AM
Labels:
Technology
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !