காதல் திருமணம் செய்தவர்களை பிரித்து, தனித்தனியாக திருமணம் செய்து வைத்ததால், மனமுடைந்த இருவரும், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மதிவாணன், 45; கட்டில் விற்பனை செய்து வந்தார். கேரளா மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர், சரிதா, 35. காதலித்த இருவரும், பெற்றோருக்கு தெரியாமல், 1999ல், திருச்செந்தூரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், இருவரையும் பிரித்து, வேறு திருமணம் செய்து வைத்தனர். மதிவாணனுக்கு அனிதா என்ற மனைவியும், சரிதாவுக்கு சோபன்னன் என்ற கணவரும் உள்ளனர். இருவரும், அவரவர் குடும்பங்களுடன், தனியாக வசித்து வந்தனர்.
பல ஆண்டுகள் கழித்து, இருவருக்கும் பழைய காதல் நினைவுக்கு வந்துள்ளது. சரிதாவின் கணவர் வெளிநாட்டில் உள்ளதால், மதிவாணன் அடிக்கடி சந்தித்து வந்தார். இவர்களின் காதல், மீண்டும் துளிர்விட்டதை அறிந்த குடும்பத்தினர், இருவரையும் எச்சரித்தனர். இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், கோவை வந்த சரிதா, மதிவாணனுடன் குடியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை, இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தகவலறிந்த பொலிசார், இருவரது சடலத்தையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். இருவரும் தற்கொலை செய்யும் முன், கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தனர். அதில், "எங்களின் தற்கொலை முடிவு, நாங்களாக எடுத்து கொண்டது. எங்களை யாரும் தற்கொலைக்கு தூண்டவில்லை.
எங்களது விருப்பப்படி, நாங்களே தற்கொலை முடிவெடுத்துள்ளோம்´ என, குறிப்பிடப்பட்டிருந்தது.
தசாப்தம் கடந்தும் காதலர்கள் தற்கொலை: மீண்டும் துளிர்விட்ட காதலின் விளைவு!
Written By TamilDiscovery on Sunday, July 7, 2013 | 3:02 AM
Related articles
- இந்தியக் கடல் எல்லையில் அமெரிக் கப்பலில் ஆயுதக கடத்தல்?
- சாதுவின் கனவில் மன்னர்: 1,000 டன் தங்கப் புதையலை!
- ஆட்டையைப் போட்ட ஆட்டுடன் நகரமுடியாமல் தவிக்கும் மலைப் பாம்பு.
- நள்ளிரவில் தனியாக வெளியே வந்த ராகுல்: மர்மப் பெண்ணுடன் உரையாடல்!
- பேஸ்புக் அரட்டைக்குத் தடை: மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
- இரயிலில் சில்மிஷம்: பெண்கள் கதறியும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்!
Labels:
India
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !