தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி உடல் மற்றும் மன இயக்கங்கள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்த நிலையில் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் மட்டுமே உயிர்வாழ்வதாக தெரிவிக்கும் செய்திகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
நெல்சன் மண்டேலாவின் மூத்த மகளின் சார்பில் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டு ஆவணத்தில், நெல்சன் மண்டேலாவின் உடல் நலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் இயந்திரமொன்றின் உதவியுடன் சுவாசித்து உயிர்வாழ்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வியாழக்கிழமை வெளியான நீதிமன்ற ஆவணங்கள் நெல்சன் மண்டேலாவிற்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் அவர் நிரந்தரமாக உடல் இயக்கங்கள் ஸதம்பிதமடைந்து மரக்கட்டை போன்ற நிலையை அடைந்துள்ளதாக தெரிவித்து அவருக்கு பொருத்தப்பட்டுள்ள உயிர்காப்பு உபகரணத்தின் செயற்பாட்டை நிறுத்த அவரது குடும்பத்தினருக்கு ஒரு வாரத்திற்கு முன் ஆலோசனை வழங்கியுள்ளதாக கூறுகின்றன.
நெல்சன் மண்டேலா கடந்த ஜூன் 8 ஆம் திகதி நுரையீரல் பாதிப்பொன்றுக்கு உள்ளாகிய நிலையில் பிரெரேரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனைக்கு விஜயம் செய்து மண்டேலாவை நேரில் பார்வையிட்ட ஜனாதிபதி ஜாகொப் ஸுமா, அவரது நிலைமை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ள போதும் வேரது உடல் நலம் ஸ்திரமாக உள்ளதாக தெரிவித்தார்.
நெல்சன் மண்டேலா மரக்கட்டை போன்ற நிலையிலுள்ளதாக தெரிவிக்கும் செய்திகளுக்கு மருத்துவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாக தென் ஆபிரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !