இரவு நேர பணியில் இருக்கும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கனடாவை சேர்ந்த உடலியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
பெண்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கும் மார்பக புற்றுநோய் குறித்து இதில் தீவிரமாக ஆராயப்பட்டது.
கனடாவின் வான்கூவர், பிரிட்டிஷ் கொலம்பியா, கிங்ஸ்டன், ஆன்டாரியோ நகரங்களில் மார்பக புற்றுநோய் பாதித்த 1,134 பெண்களிடமும், அதே வயதில் நோய் பாதிக்காத 1,179 பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 3ல் ஒருவர் தொடர்ந்து இரவு பணியில் வேலை பார்ப்பவர். 15 முதல் 29 வயது வரையில் அதாவது 14 ஆண்டுகள் வரை தொடர்ந்து இரவு பணிக்கு சென்றுவந்த பெண்களுக்கு எந்த பாதிப்பும் தெரியவில்லை. ஆனால், 30 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள், தொடர்ந்து இரவு பணியில் இருந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு 2 மடங்காக இருந்தது. இதற்கு முக்கிய காரணம், உடல் சுரப்பிகள்தான் என்று தெரியவந்துள்ளது.
அதாவது தூங்காமல் வேலை செய்வதால், உடலில் தூக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது. தூக்கத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் தூக்கத்தை வரவழைக்கவும் உதவும் மெலடோனின் சுரப்பு குறைய ஆரம்பிக்கிறது. இதனால் உடல் பாதிக்கப்படுகிறது.
மேலும் விட்டமின் டி குறைவது, உடல் கடிகாரத்தில் மாற்றம் ஏற்படுவது, வாழ்க்கை முறை மாற்றம் ஆகிய அனைத்தும் மார்பக புற்றுநோய் மற்றும் உடலில் கட்டிகள் போன்றவற்றுக்கு முக்கிய காரணமாகின்றன என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
Home »
Health and Tips of medicine
» இரவு நேர கடமையில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம்!
இரவு நேர கடமையில் ஈடுபடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு அதிகம்!
Written By TamilDiscovery on Saturday, July 6, 2013 | 9:04 PM
Labels:
Health and Tips of medicine
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !