மெக்சிகோ: மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள, சகோல்கோ நகரில் குப்பைத் தொட்டி ஒன்றில் ஏழு மனித தலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவை யாருடையவை, யாரால் அங்கு கொண்டு வந்து வீசப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் செல்வோர் குப்பைத்தொட்டியில் துர்நாற்றம் வருவதாக அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் சகோல்கா நகரில் உள்ள குப்பைத் தொட்டியிலிருந்து சுமார் ஏழு தலைகள் மற்றும் சில உடல் உறுப்புகள் அடைத்து வைக்கப்பட்ட குப்பைக் கவர் கிடைத்துள்ளது.
அதனைப் பார்த்து அதிர்ந்த போலீசார், இந்த வெட்டப்பட்ட தலைகள் யாருடையவை, யார் இங்கே கொண்டு வந்து வீசியது என விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால், மேற்கொண்டு இது குறித்து கருத்து தெரிவிக்க அம்மாநகர போலீசார் மறுத்து விட்டனர்.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !