செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை உள்ளதா என்பதை ஆராயும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.
இதற்காக ரோவர் விண்கலத்துடன் கியூரியாசிட்டி ரோபோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது முதன்முறையாக மலைப்பகுதியை ஆய்வு செய்ய தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளால் அனுப்பிவைக்கப்பட்ட இந்த விண்கலம், 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் திகதி செவ்வாயில் தரையிறங்கியது.
கிளெனெல்க் என்ற இடத்தை ஆராய்ந்த இந்த ரோபோ, அங்கு பழங்காலத்தில் ஈரப்பதமும், நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சூழ்நிலையும் இருந்துள்ளதை கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த கியூரியாசிட்டி ரோவர், ஷார்ப் என்று பெயரிடப்பட்டுள்ள மலைப் பகுதியின் அடிவாரத்தை இப்போது அடைந்துள்ளது.
மலைப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாக சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து கியூரியாசிட்டி ரோவர் ஆராய உள்ளது குறிப்பிடத்தக்கது.
கியூரியாசிட்டி செவ்வாயில் தரையிறங்கிய அழகான காட்சி.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !