அமெரிக்க கடற்படையின் சிறப்புப் படைப்பிரிவு இலங்கை படைகளின் சிறப்புப் படைப் பிரிவுகளுடன் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டு வருகிறது.
திருகோணமலை டொக்யார்ட்டிலேயே இந்தப் பயிற்சி கடந்த 2 ஆம் திகதி ஆரம்பமானது.'பிளாஸ் ஸ்ரைல் கூட்டுப் பயிற்சி' என்ற பெயரில், ஆண்டு தோறும் நடத்தப்படும இந்தப் பயிற்சி எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து இடம்பெறவுள்ளது என்றும் இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
இதில், இலங்கை கடற்படையின் சிறப்பு படகு அணி, அதிவேகத் தாக்குதல் படகு அணி,
சுழியோடிகள், துரித மீட்பு அணி என்பனவும், இலங்கை விமானப்படையின் எம்.ஐ-24
தாக்குதல் உலங்குவானூர்தி அணியும், சிறப்புப் படைப்பிரிவும்
பங்குபற்றியுள்ளன. அமெரிக்க கடற்படையின் சார்பில் ‘சீல்’ எனப்படும்
சிறப்புப் படைப்பிரிவு, சிறப்பு படகு அணி, விமானப்படை ஆகியவற்றைச் சேர்ந்த
10 பேர் கொண்ட குழு இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.
போர்ப்பயிற்சி
அல்லாத இந்தப் பயிற்சி, போரில் காயமுற்றவர்களை தந்திரோபாயமாக கவனித்தல்,
நீரில் வேகமான மீட்புப் பணியில் ஈடுபடுதல், உலங்குவானூர்தி மூலம் மீட்புப்
பணிகளை மேற்கொள்ளல் என்பனவற்றை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சி நடவடிக்கை
அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போரல்லாத கூட்டுப் பயிற்சித் திட்டத்தின் கீழேயே இந்தப் பயிற்சிகள் இடம்பெறுகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !