உத்தர்காண்ட் மாநிலத்தின் புனித தலமான கேதார்நாத் தற்போது பேய்களின் நகரமாக உருமாறிவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேதார்நாத் மீட்புப் பணிகள் குறித்து பதிலளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனடிப்படையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், உத்தர்காண்டில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்த மக்களை உடனடியாக மீட்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும் பணியில் மாநில அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. கேதார்நாத்தில் ஏராளமான உடல்கள் மண்ணிலும், பாறைகளின் இடுக்கிலும் புதைந்துள்ளது. அவற்றை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. கேதார்நாத் நகரமே பேய்களின் நகரம் போல காட்சியளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர்காண்ட் மாநில அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், காணாமல் போனவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. வெள்ளம் பெருக்கெடுத்த போது, உத்தர்காண்ட் வந்தவர்களின் பட்டியலை மாநில செயலாளர்களிடமும் கோரியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.
0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !